அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரை விமர்சனம்!

27 April 2019 சினிமா
avengers4-end-game.jpg

ரேட்டிங் 4.7/5

அவெஞ்சர்ஸ் பட வரிசையில், கடைசியாக வெளியாகி உள்ளது எண்ட் கேம். கிட்டத்தட்ட ஒரு வருடமாக இப்படத்திற்காக, உலகம் முழுக்க உள்ள மார்வெல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா மற்றும் தோர் ஆகியோரின் ஆக்ஷன் காட்சிகளைப் பார்ப்பதற்காகவே, இப்படத்தினை நீங்கள் திரையில் பார்க்கலாம்.

விஜய் சேதுபதி யப்பா! இவரால, ஐயர்ன் மேன் கதாப்பாத்திரத்த, யாராலும், ரசிக்க முடியலன்னுதான் சொல்லனும். அந்த அளவிற்கு, அந்த கதாப்பாத்திரத்தை தன்னுடையக் குரலால், கொலை செய்துவிட்டார் என்று தான் கூற வேண்டும். எந்தப் படத்திலும் இல்லாத அளவிற்கு, கேப்டன் அமெரிக்கா மாஸ் காட்டியுள்ளார். ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும், ஒவ்வொரு இடத்தில், முக்கியத்துவத்தை கொடுத்துள்ளனர். என்பதால், அனைத்துக் கதாப்பாத்திரங்களுமே மாஸாக உள்ளனர்.

உலகில் பாதி பேர் அழிந்த பிறகு, என்ன ஆனது. உலகை இவர்கள் மீட்டார்களா, அல்லது மாட்டிக்கொண்டார்களா? விண்வெளியில் சுற்றும், டோனி ஸ்டார்க்கிற்கு என்ன ஆனது? உலகை இவர்கள் மீட்டார்களா? தனோஷிற்கு என்ன ஆனது? என்பது தான் மீதிக் கதை.

ஆண்ட்ரியா குரல் சூப்பரா இருக்கு! ஆன விஜய் சேதுபதி குரல் கேட்கும் ஒவ்வொரு சீன்லயும், டோனி ஸ்டார்க்கின் ரசிகர்கள் விஜய் சேதுபதியை கழுவி ஊற்றுகின்றனர்.

கேப்டன் அமெரிக்கா மற்றும் டோனி ஸ்டார்க் உயிருடன் இருக்காங்களா, அல்லது இறந்து விட்டார்களான்னு, படத்தப் பார்த்துத் தெரிஞ்சுக்குங்க!

தனோஷை வெல்வதற்கு ஒவ்வொரு, மார்வெல் கதாப்பாத்திரமும் ஒருவர் பின் ஒருவராக அறிமுகம் ஆகின்றனர். படம் முழுக்க காமெடி, செண்டிமெண்ட், கண்ணீர், தியாகம் என நவரசத்தையும், பிழிந்து ஒரு ஜூஸ் கொடுத்திருக்காங்கன்னுதான் சொல்லனும்.

படத்தின் கிராபிக்ஸ் மற்றும் விஎப்எக்ஸ் காட்சிகள் அனைவரும், பாராட்டும் விதத்தில் அல்ல, கொண்டாடும் விதத்தில் உள்ளது என்று தான் கூற வேண்டும்.

கடைசி அரை மணி நேரத்தில் வரும் சண்டைக் காட்சிகளை, நீங்களேப் பாருங்கள். கண்டிப்பாக நீங்கள் பிரமிப்படைவீர்கள்.

மொத்தத்தில், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இறுதி அல்ல, ஆரம்பம்!

HOT NEWS