அயனாவரம் பாலியல் வழக்கு! குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதித்து நீதிமன்றம்!

04 February 2020 அரசியல்
child12.jpg

கடந்த 2018ம் ஆண்டு, சென்னை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த 12 வயது சிறுமியினை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய் வழக்கில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை விதித்து தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 2018ம் ஆண்டு, சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. அந்த குடும்பத்தினை சேர்ந்த 12 வயது சிறுமியினை, அந்த குடியிருப்பின் லிப்ட் ஆப்பரேட்டர் முதல், காவலாளிகள் வரை கிட்டத்தட்ட 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். இவர்களை கைது செய்த போலீசார், அவர்களை, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

பின்னர், இவர்களுடைய வழக்கினை விசாரித்த நீதிமன்றம், இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இதில், ஒரு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒன்பது குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், நானகு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

HOT NEWS