அயோத்தில் துணை இராணுவம் குவிப்பு! போலீஸ் ரோந்து பணி! இந்தியா முழுக்க உஷார் நிலை!

08 November 2019 அரசியல்
supremecout.jpg

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள, அயோத்தி பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு, வரும் நவம்பர் 10ம் தேதி முதல் 14ம் தேதிக்குள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக, அயோத்தியில் பொதுமக்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. மேலும், அப்பகுதியில், 1000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், 4000 துணை இராணுவ வீரர்களை பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைத்துள்ளது, மத்திய உள்துறை அமைச்சகம்.

ஏற்கனவே, உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி பகுதியில், நான்கடுக்குப் பாதுகாப்பு உட்பட, மோப்ப நாய்கள், வெடிகுண்டு சோதனை செய்யும் கருவிகள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

இந்தியாவின் முக்கியப் பகுதிகள், பதற்றமானப் பகுதிகள் என பல இடங்களில் பாதுகாப்பினை வலுப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, போலீசார் தீவிர ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் கூறுகையில், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தீர்ப்பு வெளியாகும் நாளில் நடத்தவும் அதற்குப் பாதுகாப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்விதத்திலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதில், அரசு தீவிரமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

HOT NEWS