அஜர்பைஜான் அரசாங்கத்தின் 790 படை வீரர்கள் நாங்கள் நடத்தியத் தாக்குதலில் பலியானதாக, ஆர்மீனியா அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.
ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜான் நாடுகளுக்கும் இடையில், கடந்த சில வாரங்களாக மோதல் நடைபெற்று வருகின்றது. இதனால், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் அடங்கிய மின்ஸ்க் குழுவிற்கு பிரான்ஸ் அவசர அழைப்பு விடுத்துள்ளது. இரு நாடுகளும், ஒருவரை ஒருவர் ஆக்கிரமிப்பில் ஈடுபடத்தாக குற்றம் சாட்டி வருகின்றனர். நாகோர்னோ-கராபக் என்றப் பகுதிகளில் அத்துமீறி தக்குதல்களை நடத்தி வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக் கிழமைத் தொடங்கி, இந்த சண்டை நடைபெற்று வருகின்றது. இதன் உச்சமாக செவ்வாய் கிழமை அன்று அஜர்பைஜான் நாட்டின் படைகள் மீது, ஆர்மீனியா கடுமையானத் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதல் காரணாக, அஜர்பைஜானின் 790 படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 137 கவச வாகனங்களும், 70க்கும் மேற்பட்ட ராட்சத ட்ரோன்களும் வீழ்த்தப்பட்டதாக, ஆர்மீனியா தெரிவித்து உள்ளது.
ஐநா உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இருப்பினும், இரு நாடுகளும் தொடர்ந்து சண்டையிட்டு வருவதால், போர் பதற்றம் நீடித்து வருகின்றது.