அமோக விற்பனை! பாபா கீ டாபா கடை தாத்தா புதிய கடையினை திறந்தார்!

22 December 2020 அரசியல்
babkadaba.jpg

டெல்லியில் சிறியதாக கடை வைத்திருந்த பாபா கீ டாபா கடை தாத்தா, தற்பொழுது புதிய கடை ஒன்றினைத் திறந்து உள்ளார்.

இந்தியாவில் கடந்த மார்ச் 25ம் தேதி அன்று, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு, ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டது. இதனால், வெளியில் பொதுமக்கள் நடமாட்டமானது முற்றிலுமாகக் குறைந்தது. இந்த சூழலில், டெல்லியில் சாலையோரத்தில் கடைவைத்திருந்த 80 வயதுள்ள முதிவர் ஒருவர் இந்திய அளவில் வைரல் ஆனார். அவருடையக் கடையில் உள்ளப் பொருட்களை யாரும் வந்து வாங்குவது இல்லை எனவும், விற்பனை இல்லாதக் காரணத்தால் நானும் என் மனைவியும் உணவிற்கே கஷ்டப்படுவதாகவும் தெரிவித்து வந்தார்.

இந்த சூழலில், இதனைப் பார்த்த பல லட்சம் டெல்லிவாசிகள், அவருடையக் கடைக்கு படையெடுத்தனர். அவ்வளவு தான். அந்தக் கடையானது, மிகவும் பிஸியாகி விட்டது. சில வாரங்களுக்கு முன்பு, அவரிடம் செய்தியாளர்கள் பேட்டியெடுத்தனர். அப்பொழுது பேசிய அவர், தான் தற்பொழுது நன்றாக இருப்பதாகவும், அதற்கு ஆதரவளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்பொழுது டெல்லியில் புதியதாக உணவகம் ஒன்றினைத் திறந்துள்ளார். அது குறித்து அவர் பேசுகையில், மக்களுடையப் பேராதரவினால் தற்பொழுது புதிய உணவகத்தினைத் திறந்துள்ளேன். இந்தக் கடையில் இந்திய மற்றும் சீன உணவுகள் விற்கப்பட உள்ளன. இதற்காக இரண்டு சமையல் கலைஞர்களை வேலைக்கும் வைத்துள்ளேன். இந்தக் கடைக்கும் பாபா கீ டாபா எனவும் பெயர் வைத்துள்ளேன். பழையக் கடையினை நான் அகற்றவில்லை. அதையும் நானே பார்த்துக் கொள்கின்றேன் என்று பெருமிதமாக கூறினார்.

HOT NEWS