பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக சீனாவினை புறக்கணிப்போம்! பாபா சொல்லிட்டார்!

05 April 2020 அரசியல்
babaramdev.jpg

இந்தியா முழுவதும் தற்பொழுது வரை, 75 பேர் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மரணமடைந்துள்ளனர். 3,000க்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்று உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர், 264 பேர் இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய டிவிட்டர் கணக்கில் கருத்துத் தெரிவித்துள்ள யோகா பாபா ராம்தேவ், சீனாவினை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அவருடையப் பதிவில், இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. சீனாவில் இருந்து பரவிய வைரஸ் காரணமாக, உலகமே தற்பொழுது மிகப் பெரிய ஆபத்தில் உள்ளது. 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், பொதுமக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

இதற்கு முக்கியக் காரணமாக இருக்கும் சீனாவினை, உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும். அதனை இந்தியா முன்னெடுக்க வேண்டும். பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்த வைரஸ் பரவலுக்குக் காரணமாக இருக்கும் சீனாவினை, நாம் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS