பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று, இந்தியா முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஆறாம் தேதி அன்று, பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகின்றது. அன்று எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்கு, இந்தியா முழுவதும் போலீசாரும், உளவுத்துறை உள்ளிட்டப் பல பாதுகாப்புப் பிரிவினரும் தீவிர ரோந்து பணிகள் மற்றும் சோதனைகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டும் இன்று பாபர் மசூதி இடிப்பு தினமானது நடைபெறுகின்றது. அதனை ஒட்டி, தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் எனப் பலவற்றிற்கும் போலீசார் கூடுதல் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
தற்பொழுது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்கும் பொருட்டு, மோப்ப நாய்கள், மெட்டல் டிடக்டர் உள்ளிட்டவைகளைக் கொண்டு போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.