கொரோனாவினை குணமாக்கும் பாப்ஜி அப்பளம்! பாஜக அமைச்சர் வெளியீடு!

24 July 2020 அரசியல்
arjunrammeghwal.jpg

ராஜஸ்தான் மாநிலத்தினைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற எம்பியான அர்ஜூன் ராம் மேக்வால் புதிதாக அப்பளம் ஒன்றினை அறிமுகம் செய்து வைத்து உள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸிற்குத் தற்பொழுது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனிடையே, தற்பொழுது ராஜஸ்தான் மாவட்டம், பிகானிரியின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன் புதிதாக ஒரு சர்ச்சையினைக் கிளப்பி உள்ளார் அங்குள்ள அப்பளம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று பாப்ஜி பப்பட் என்ற அப்பளத்தினை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து, சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ள அர்ஜூன், இந்த அப்பளம் அதிக எதிர்ப்பு சக்திக் கொண்டது எனவும், அதனை உண்டால் கொரோனாவில் இருந்து குணமாகலாம் எனவும் விளம்பரம் செய்துள்ளார். இது தற்பொழுது சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, கொரோனா மருந்து குறித்த வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என, மத்திய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.

இந்தி மொதியில் பாப்ஜி என்றால் அண்ணி என்றும், பப்பட் என்றால் அப்பளம் எனவும் பொருள்படும். தற்பொழுது இவர்கள் தயாரித்து வெளியிட்டுள்ள அப்பளத்திற்கு தமிழில் அண்ணி அப்பளம் என்று அர்த்தம். வோக்கல்பார்லோக்கல் என்ற ஹேஸ்டேக்கில், இந்தியாவில் தயாரிப்பதை முன்னிலைப்படுத்தும் விதமாக அவர் இதனை செய்வதாகக் கூறியுள்ளார்.

HOT NEWS