பாக்தாத் பகுதியில் இராக்கெட் மூலம் தாக்குதல்! இரு நாடுகளும் குற்றச்சாட்டு!

09 January 2020 அரசியல்
soldiersattack.jpg

ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் க்ரீன் சோன் எனப்படும், அதிகப் பாதுகாப்பு நிறைந்தப் பகுதியில், நேற்று இரவு ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதனை, ஏஎப்பி என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் படைத் தலைவர் குவாசிம் சுலைமானியைக் கொன்றதற்காக, நேற்றைய முன்தினம் (07-01-2020) அன்று, ஈரான் அரசாங்கம், ஈரானைச் சுற்றியுள்ள அமெரிக்க பாதுகாப்பு நிலைகள் மீது, 12க்கும் மேற்ப்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால், இரண்டு அமெரிக்க நிலைகள் பாதிப்படைந்ததாக அமெரிக்கா தெரிவித்தது. இதனையடுத்து, அதிபர் ட்ரம்ப் இந்தத் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், நேற்று இரவு ஈராக் நகரில், பொதுமக்கள் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில், க்ரீன் சோன் என்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில், இரண்டு ராக்கெட்கள் விழுந்து வெடித்தன. இதனால், பெரும் சப்தம் உண்டானது. இதனை அந்நகரில் இருந்த அனைவரும் உணர்ந்ததாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இந்தத் தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என, ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை ஈரான் தான் நிகழ்த்தி உள்ளது என, அமெரிக்கா அடித்துக் கூறுகின்றது. ஆனால், எங்களைப் பழிவாங்கவே அமெரிக்கா இது போன்ற தாக்குதலை நிகழ்த்தி உள்ளதாக, ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கிடையிலும், பதற்றம் அதிகரித்துள்ளது.

HOT NEWS