பயன்பாட்டிற்கு வரும் பாகுபலி படத்தின் காளக்கேயர் மொழி! புதுசால இருக்கு!

25 February 2020 சினிமா
kiliki.jpg

பாகுபலி படத்தில் காளக்கேயர் என்ற குழுவினருக்கும், கதாநாயகனுக்கும் இடையில் போர் நடைபெறும். அதில், காளகேயர்கள் தங்களுடைய மொழியான கிளிக்கி மொழியில் பேசுவர். அந்த மொழியானது, உலக அளவில் பிரசித்தி பெற்றது.

தற்பொழுது, அந்த மொழிக்கு உருவம் கொடுத்துள்ளார் கவிஞர் மதன் கார்க்கி. இந்த மொழிக்கு, தேவையான எழுத்துக்களையும், இலக்கணத்தையும் தற்பொழுது அவர் உருவாக்கி உள்ளாராம். விரைவில், இந்த மொழிக்கான அகராதியும் வெளியிடப்பட உள்ளதாம். இந்த மொழியினை, குறைந்தது நாற்பது லட்சம் பேரையாவது, பயன்படுத்த வைப்பேன் எனக் கூறுகின்றார்.

இந்த மொழியானது, மிகவும் காமெடியாகவே இருக்கின்றது என, பலரும் கூறுகின்றனர். இருப்பினும், இந்த விஷயம் சற்று கவமுடன் கையாள வேண்டிய ஒன்றாகும். காரணம் என்னவென்றால், ஏற்கனவே, பல மொழிகள் அழியும் தருவாயில் உள்ளன.

இந்நிலையில், தொடர்ந்து, இது போன்று கற்பனைக்காக உருவாக்கப்பட்ட ஒன்றினை, உருவம் கொடுத்து, ஒலி வடிவம் கொடுத்து, அதற்காக இலக்கணம் ஒன்றினையும் உருவாக்கி, அதனைப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக, மதன் கார்க்கியினைப் பாராட்ட வேண்டும்.

ஆனால், மக்கள் ஒரு வேளை விளையாட்டிற்காகப் பயன்படுத்த ஆரம்பித்து, காலப் போக்கில் இதனையே அனைத்தும் பயன்படுத்த ஆரம்பித்தால், மற்ற மொழிகளின் நிலைமை என்னவாகும் என்பது அச்சத்திற்குரிய விஷயமாகும். இந்நிலையில், இந்த மொழித் தெரிந்தவர்களுக்கு, தான் வேலை வாங்கித் தருவதாகவும் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

ஆப்த லிம்தா, ஆலே ஊஊஊஊஊ!

HOT NEWS