நீட் தேர்வு மாணவனுக்கு ஜாமீன்! தந்தைக்கு காவல்!

17 October 2019 அரசியல்
neet.jpg

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், மாணவன் உதித் சூர்யா மற்றும் அவனுடைய தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மாணவனின் வயது மற்றும் மனநிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமீன் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. ஆனால், அவருடைய தந்தை திரு. வெங்கடேசனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த குற்றத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க வேண்டியுள்ளதால், அவருக்கு ஜாமீன் தர இயலாது எனக் கூறியுள்ளார்.

அந்த மாணவன், தினமும் காலை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்னிலையில், 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் தொடர்பாக, பலரும் சிக்குவர் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது அந்த மாணவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

HOT NEWS