மாஸ்க் ஏற்றுமதிக்கு தடை நீக்கம்! மத்திய அரசு அதிரடி!

07 October 2020 அரசியல்
face-mask.jpg

வெளிநாடுகளுக்கு சுவாசக் கவசங்களை ஏற்றுமதி செய்வதற்கு விதித்திருந்த தடையினை, மத்திய அரசு தற்பொழுது நீக்கி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸானது, இந்தியாவில் நாளுக்கு நாள் காட்டுத் தீ போல வேகமாகப் பரவி வருவதால், ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதனால், சுவாசக் கவசங்கள் தட்டுப்பாடானது இந்தியாவில் ஏற்பட்டது. அதனை சமாளிக்கும் பொருட்டு, மத்திய அரசு சுவாசக் கவசங்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது.

ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி அன்று, ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையில் விலக்கு அளித்தது. மாதம் 50 லட்சம் என்95 மற்றும் எப்எப்பி2 மாஸ்க்குகளை மட்டும் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியது. தற்பொழுது அந்தத் தளர்வுகளும் நீக்கப்பட்டு உள்ளன. இது குறித்து, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் ஜெனரல் அனுமதி வழங்கி உள்ளார். அதன்படி, இனி எவ்வளவு வேண்டும் என்றாலும், ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS