தடை நீக்கம்! இந்தியாவிற்கு ஹில்சா மீன்கள் ஏற்றுமதி தொடங்கியது!

30 September 2019 அரசியல்
fishing.jpg

கடந்த 2012ம் ஆண்டு, ஹில்சா வகை மீன்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய வங்கதேசம் விதித்த தடையை, தற்பொழுது நீக்கியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு, ஹில்சா எனப்படும் ஐலிஸ் வகை மீன்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய வங்கதேச அரசுத் தடை விதித்து. உள்ளூர் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, இந்தத் தடையை கொண்டு வருவதாகவும் கூறியது. இந்நிலையில், தற்பொழுது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.

மேலும், இனி 500 டன் ஹில்சா வகை மீன்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அந்நாடு அனுமதி அளித்துள்ளது. அங்குள்ள இந்த ஹில்சா மீன்களை நம்பி கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்து வருகின்றனர். தற்பொழுது, நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, இந்த தடையை நீக்கியுள்ளது வங்கதேசம்.

இதன் மூலம், அந்நாட்டுக்கு, 3 பில்லியன் வங்கதேச நாணயத்தின் அளவிற்கு, பணம் வரும் எனவும் அந்நாடு எதிர்ப்பார்க்கின்றது.

HOT NEWS