உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், பலவித மருந்துகளை உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், வங்கதேசமும் தங்கள் நாட்டில் Ivermectin & antibiotic Doxycycline என்ற மருந்தினைப் பயன்படுத்தி வருகின்றது.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸினால், 53 லட்சம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்தியா உட்பட பல நாடுகள், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினைப் பயன்புடுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வங்கதேசத்தில் புதிய மருந்து ஒன்றின் கலவையைப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
இந்த மருந்து, கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தவில்லை. மாறாக, இந்த மருந்தானது கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆற்றலை நம்முடைய உடலுக்கு வழங்குகின்றது. இதன் மூலம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் மீண்டு வர இயலும் என்றுக் கூறப்படுகின்றது.
இந்த மருந்தினைப் பயன்படுத்திய நோயாளிகள், எளிதாகவும் விரைவாகவும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளதாகவும், இது எங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளதாகவும் விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.