சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே, பொருளாதார வர்த்தகப் போர் நடைபெற்று வருவதால், சீனாவில் உள்ள அமெரிக்காவினைச் சேர்ந்த நிறுவனங்கள் வேகமாக வெளியேறி வருகின்றன.
இந்த நிறுவனங்களை, இந்தியாவினைச் சேர்ந்த நிறுவனங்கள் ஈர்க்கத் தவறியதால், மிகக் குறைந்த செலவில், அவர்களுடைய வேலைகளை செய்து தருவதாக, வங்கதேசமும், நேபாளமும் போட்டிப் போட்டுக் கொண்டு அங்குள்ள ப்ராஜெக்ட்டுகளை ஈர்த்து வருகின்றன.
இதன் காரணமாக, இந்த ஆண்டு வங்கதேசத்தின் வளர்ச்சி விகிதம் 8.1 சதவீதமாக உள்ளது. வங்கதேசத்தின் பிரதான உற்பத்திப் பொருளாக, ஆடை உற்பத்தி இருந்து வருகின்றது. சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் நடைபெற்று வரும் பிரச்சனையினை, வங்கதேசம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதால், அந்நாட்டின் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கின்றது.
இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக, இந்திய நிறுவனங்கள் புதிய முதலீடுகளைத் தவிர்த்து வருகின்றனர். இதனையும், வங்கதேசம் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் அடைந்து வருகின்றது.