வங்கிக் கடன் வட்டி விவகாரத்தில், வட்டிக்கு வட்டி உண்டு என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் தொடங்கி, கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கானது அமலில் உள்ளது. இதனால், வங்கிகள் எவ்வித வட்டி அல்லது தவணை உள்ளிட்ட எதனையும் வசூலிக்கக் கூடாது என, ரிசர்வ் வங்கிக் கூறியது. இதனால், யாரும் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய வட்டியினைக் கட்டவில்லை. இந்த சூழ்நிலையில், தற்பொழுது அந்த வட்டிக்கு வட்டி போட்டு உள்ளன பல வங்கிகள்.
இது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்க வேண்டும் என, மத்திய அரசிற்கு உத்தரவிட்டது. இதற்கு மத்திய அரசும், தற்பொழுது பதிலளித்துள்ளது. அதில், வட்டிக்கு வட்டி விதிக்கப்படுவதற்கு மத்திய அரசு தடை விதிக்க முடியாது எனவும், கடன் வசூலின் மீதான அழுத்தத்தினை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும், மேலும் பொருளாதாரத்தினை வலுவிழக்கும் செயலினை மத்திய அரசு செய்யாது எனக் கூறியுள்ளது.