புழக்கத்தில் இருந்து தடைசெய்யப்பட்ட மருத்துவ முறைகள்

24 June 2019 உடல்நலம்
bannedtreatments.jpg

நேற்று வரை பயன்படுத்தியப் பல மருந்துகளையும் மருத்துவ முறைகளையும் இன்று நம்முடைய அரசுகளும், மருந்து நிறுவனங்களும் தடை செய்திருக்கின்றன. ஆனால், இதனைப் பயன்படுத்தியவர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இந்த மாதிரி புழக்கத்தில் இருந்து தடை செய்யப்பட்ட மருந்துகளையும் மற்றும் மருத்துவ முறைகளையும் இங்குப் பார்ப்போம்.

மெர்க்குரி

பென்சிலின் கண்டுபிடிப்பதற்கு முன்னர் மெர்க்குரியை சிபிலிஸ் நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தினர். நமக்கு இன்று மெர்க்குரியின் தீமைகளைப் பற்றி நன்றாகத் தெரியும். ஆனால், அந்தக் காலத்தில் அதற்கு அதிக வாய்ப்புகள் இல்லை. இதனை மருந்தாக எடுத்துக் கொண்டப் பலருக்கு பற்கள் சேதமடைந்துள்ளன. ஒரு சிலரின் உடலின் உட்புற பாகங்கள் சேதமடைந்துள்ளன. இன்னும் ஒரு சிலர் மரணத்தை அடைந்துள்ளனர். இந்தப் பக்க விளைவுகளின் காரணமாக இதனை உடனடியாக தடை செய்துவிட்டனர்.

கதிரியக்க நீர் (radio active water)

1900களில் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையைப் போக்க இந்த கதிரியக்க நீரைப் பருகி உள்ளனர். இதனால் ஆண்கள் "வீரியமாக" செயல்பட முடியும் என பிரச்சாரம் செய்தனர். இதனை நம்பிப் பல பேர் இதனை வாங்கிப் பருகினர். இதன் விளைவாக மரணத்தை மட்டுமே பரிசாகப் பெற்றனர். ரேடியம் பற்றி அந்தக் கால கட்டத்தில் ஒரு புரிதல் இல்லை என்பதும், மக்களின் அறியாமையைப் பயன்படுத்திப் பல நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளனர் என்பதையும் நம்மால் உணர முடிகிறது.

வைர்லிங் சேர்ஸ் (whirling chairs)

இதனை மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தினர். இதில் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை அமர வைத்து கை மற்றும் கால்களைக் கட்டி விடுவர். இதனால் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் சரியாகிவிடுவர் என நம்பினர். ஆனால், பல மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் மரணம் அடைந்ததால் இம்மருத்துவ முறைக்குத் தடை விதித்தனர்.

லோபோடோமி (lobotomy)

இதனை மூளையில் ஏற்படும் நோய்க்காகப் பயன்படுத்தினர். இதன் மூலம் மூளையில் உள்ள இரத்த ஓட்டத்தைச் சரிசெய்ய பயன்படுத்திய போதிலும் பலர் இந்த மருத்துவ முறையால் உயிரிழந்தனர். இதனை நாம் பலப் படங்களில் நாம் பார்த்திருப்போம்.

யூரின் தெரபி

நம்ம பியர் கிரில்ஸ் போல தன்னுடைய சிறுநீரை அல்லதுப் பிறரின் சிறுநீரை 1900ல் குடித்தனர். இதனால் உடல் நலக்குறைவின்றி நாம் வாழ இயலும் என நம்பப்பட்டது. இதனால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தவர்களின் சிறுநீரை பாட்டிலில் அடைத்து விற்றனர். பின்னர் இதனை ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்தன.

ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் இந்த மூட நம்பிக்கைகள் நம் நாட்டில் கடைப்பிடிக்கப்படவில்லை. அதே சமயம் வேதனையான விஷயம் என்னவென்றால், இதனைப் பயன்படுத்திப் பல கம்பெனிகள் மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர்.

HOT NEWS