ட்ரம்பினை கடுமையாக விமர்சித்த ஒபமா! தேர்தல் பிரச்சாரத்திற்கு தயார்!

11 May 2020 அரசியல்
barackobama.jpg

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பினை, முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு, அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அமெரிக்க மொத்தமும் கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு இந்த வைரஸால் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 80,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து சீனா மீது புகார் கூறி வருகின்றார். அவர் மீது, தன்னுடைய அதிருப்தியினையும், கண்டனத்தினையும் அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து, தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தார். அதில், பழைமைவாதம், வெறுப்பு, முறையட்ட நிர்வாக திறன், பொருளாதா பிரச்சனைகளால் அமெரிக்காவின் நிலை கடும் சோதனைக்கு உள்ளாகி உள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் தான்.

அவருடைய திறமையற்ற செயல்களால் தான், அமெரிக்க வரலாற்றிலேயே இவ்வளவு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. எனவே, அவருக்கு எதிராக தற்பொழுது தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளேன். இதற்காக, அவருக்கு எதிராக போட்டியிட உள்ள ஜோ பிடனுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளேன் எனக் கூறியுள்ளார். இது அமெரிக்க அரசியலில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS