தமிழ் சினிமாவில் பழைய விஷயங்களைத் தேடி கண்டுபிடித்து, படமாக்குவது தற்பொழுது டிரெண்டிங் விஷயமாக உள்ளது எனலாம். அந்த வகையில் தான் இந்த பாரம் திரைப்படமும் வெளியாகி உள்ளது.
வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே இந்தப் படம், ஓடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. கருப்பசாமி என்பவர், தன் தங்கை குடும்பத்தாரின் உதவி மூலம் வாழ்ந்து வருகின்றார். அவருடைய மகன்களுடன் வாழவில்லை. இந்நிலையில், திடீரென்று ஒரு நாள், விபத்து ஏற்படுகின்றது. அதற்குப் பின்னர், படுத்தப் படுக்கையாகின்றார் கருப்பசாமி. அவரை அழைத்துச் செல்லும், மகன்கள் அவருக்கு மருத்துவம் செய்கின்றனர்.
அவருடைய உடல்நிலை சரியாக, அதிகளவில் செலவாகும் என்பதால், அவரைக் கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்கின்றனர். இதனிடையே, தங்கையின் குடும்பத்தினர் வந்து அதனை தடுக்க நினைக்கின்றனர். கருணைக் கொலை நடந்ததா, அடுத்து என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக் கதை. பெரிய அளவில் ஈர்க்கும் படியான இசை இல்லை. குறும்படம் பார்ப்பது போன்ற உணர்வினையே, இப்படத்தின் ஒளிப்பதிவு நமக்கு தருகின்றது.
படத்தில் நடித்துள்ள அனைவரும், தங்களுடைய கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர் என்றுக் கூறினால் அது மிகையாகாது. கிட்டத்தட்ட 75 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் புது முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில், பழைய கால நடைமுறையான தலைக்கூத்தல் என்பது பற்றிக் கூறியுள்ளனர். இது தேவையற்ற ஒன்று என்றேக் கூறலாம்.
மொத்தத்தில் பாரம், அனைவருக்கும் பாரம்