தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தும் பொதுமக்கள்! ஸ்பெயினில் பிரிவினைப் போராட்டாம்!

20 October 2019 அரசியல்
catalonia.jpg

ஸ்பெயின் நாட்டில், பார்சிலோனாவில் போலீசாரின் அடிக்குப் பதிலாக, தரையில் அமர்ந்து, பல்லாயிரக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கேட்டலோனியா பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. ஸ்பெயின் நாட்டில் இந்தப் பிரச்சனைக்காக, பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றாகத் திரண்டு போராடி வருகின்றனர்.

அவர்கள் மீது வன்முறை செய்வதாகக் கூறி, போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், நாங்கள் அமைதியாகத் தான் போராடுகின்றோம் என்பதைக் குறிக்கும் வகையில், கையில் மொபைல் போன்களை எடுத்துக் கொண்டு, டார்ச் லைட்டுகளை அடித்து, தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

கேட்டலோனியாப் பிரச்சனைக்காக, சில முக்கியத் தலைவர்கள் தற்பொழுது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS