பேட்டின்சன் நடிப்பில் தயாராகி உள்ள பேட்மேன் திரைப்படமானது, 2022ம் ஆண்டில் தான் வெளியாகும் என அந்தப் படத்தினைத் தயாரித்த நிறுவனம் கூறியுள்ளது.
உலகளவில் பல கோடி ரசிகர்களைக் கொண்ட சினிமா கதாபாத்திரம் என்றால் அது பேட்மேன் கதாபாத்திரம் தான். அந்த கதாப்பாத்திரத்திற்கு என, பல ரசிகர்கள் பைத்தியமாக காத்திருக்கின்றனர். இந்தப் படம் பல வருடங்களாக பல்வேறுத் திரைக்கதைகளுடன் வெளியான வண்ணம் உள்ளன. இந்தப் படத்தின் அடுத்த பாகமானது, தற்பொழுது வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.
சமீபத்தில் இதன் ட்ரெய்லரானது இணையத்தில் வெளியாகி, சக்கைபோடு போட்டது. இதனை ஒட்டி இந்தப் படமானது இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தினை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி, சினிமா உலகமுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. திரையறங்குகள் மூடப்பட்டு உள்ளதால், படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனால், சினிமா தொழிலானது கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு வெளியாக இருந்த பேட்மேன் திரைப்படமானது, வருகின்ற 2022ம் ஆண்டு தான் வெளியாகும் எனக் கூறப்பட்டு உள்ளது. அதே போல், இந்த ஆண்டு வெளியாக இருந்தப் பலத் திரைப்படங்களும் அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. கொரோனா தொற்று முழுமையாக நீங்கியப் பின்னரே, இந்தப் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.