பி.இ படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்! தமிழக அரசு அதிரடி!

11 December 2019 அரசியல்
tet.jpg

இனி பி.இ படித்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வினை எழுதலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள், தற்பொழது அரசு வேலைக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று வருகின்றனர். தொடர்ந்து, நிலவி வரும் வேலைவாய்ப்பின்மைக் காரணமாக, கிடைத்த வேலையினை பொறியாளர்கள் செய்து வருகின்றனர்.

இந்தப் பிரச்சனை தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பலப் பகுதிகளிலும் நிலவி வருகின்றது. இந்தப் பிரச்சனையால், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது.

தற்பொழுது, தமிழக அரசுப் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் பொறியியல் படித்த மாணவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதலாம் என அனுமதி அளித்துள்ளது. மேலும், எந்தப் பாடப்பிரிவில் படித்திருந்தாலும், இந்தத் தேர்வினை எழுதலாம் எனவும், தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கணக்குப் பாட ஆசிரியராக பணியமர்த்தப்படுவர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS