இந்த டாக்டரை நம்பாதீங்க! பீலா ராஜேஷ் அறிவிப்பு!

27 April 2020 அரசியல்
beelarajesh.jpg

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனா வைரஸிற்காக, பல மருந்துகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே, தற்பொழுது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தனியார் செய்திச் சேனலுக்கு விளக்கமளித்துள்ளார். அதில், சித்த மருத்துவர் எனக் கூறிக் கொள்ளும் திருத்தணிகாச்சலம், எவ்வித சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட எவ்விதப் படிப்பும் படிக்காதவர். அவர் ஒரு பதிவு பெற்ற மருத்துவரே அல்ல. யாராவது கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்திருந்தால், அதனைத் தயங்காமல் தமிழகத்தில் உள்ள சென்னை அரும்பாக்கதில் அமைந்துள்ள, மருத்துவத்துறை அலுவலகத்தினைத் தொடர்பு கொள்ளலாம்.

அங்கு சென்று, தங்களுடையக் கண்டுபிடிப்பு உள்ளிட்டவைகளைத் தந்து பரிசோதனை செய்யலாம் என்றார். மேலும், திருத்தணிகாச்சலத்தின் மீது, ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு உள்ளது எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS