பெலரஸ் நாட்டில் மக்கள் போராட்டம்! பதவி விலக முடியாது என அதிபர் அதிரடி!

17 August 2020 அரசியல்
belarusprotest.jpg

பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லூகெசன்கோ, பதவி விலக முடியாது என திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.

பெலாரஸ் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அலெக்சாண்டர் லூகெசன்கோ ஆட்சியில் உள்ளார். அவருடைய ஆட்சியினைப் பலரும் வேண்டாம் என போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த நாட்டில் தேர்தல் நடைபெற்றது. அதிலும் அவரே வெற்றிப் பெற்றார். அதனை எதிர்கட்சியினரும், பொதுமக்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

அதிபர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டே அவர் வென்றார் எனப் பலரும், தங்களுடையப் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, அந்நாட்டு மக்களின் அந்நாட்டின் தலைநகரான மின்ஸ்க் நகர் உட்படப் பல நகரங்களில், வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த நாடு முழுவதும் போராட்டக் களமாக காட்சியளிக்கின்றது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அலெக்சாண்டர் லூகெசன்கோ, அதிபர் பதவியில் இருந்து விலக முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார். அண்டை நாடுகள் நான் பதவி விலக வேண்டும் என, அழுத்தம் தருகின்றன. அவர்களுடைய அழுத்தத்திற்குப் பணிந்தோம் என்றால், கட்டாயம் நாம் பாதாளத்தில் வீழ்ந்து விடுவோம் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS