பெங்களூரில் கலவரம்! 3 பேர் பலி! 50 பேர் காயம்! நடந்தது என்ன?

12 August 2020 அரசியல்
bangaloreviolence.jpg

பெங்களூரு நகரம் தற்பொழுது கலவர பூமியாக மாறியுள்ளது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு நகரில் உள்ள புலிகேசி நகர் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்தவருமான ஆகாந்தா ஸ்ரீநிவாஸ் சர்ச்சைக்குரிய வகையில், இஸ்லாமியர்கள் பற்றி பதிவு ஒன்றினை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று அவர் வீடு நோக்கியும், அங்குள்ள காவல்நிலையம் நோக்கியும் பலர் பேரணியாக சென்றனர்.

அந்த பேரணியானது, கலவரமாக மாறியது. அங்குள்ள காவல்நிலையத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனமானது தீ வைக்கப்பட்டது. அத்துடன், அந்த சட்டமன்ற உறுப்பினரின் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. நிலமை மோசமவாதை உணர்ந்த போலீசார், துப்பாக்கிச் சூட்டினை பயன்படுத்தினர். இதல் 3 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தக் கலவரத்தில் போலீசார் உட்பட 50க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கர்நாடக உள்துறை அமைச்சர் பொம்மை, சட்டத்தின் படி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படும் எனவும், எனவே பொதுமக்கள் அமைதிக் காக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இச்சம்பவம் காரணமாக, பெங்களூருவில் 144 தடை உத்தரவி பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS