பொதுவாக, தற்பொழுதுள்ள கால சூழ்நிலையில், பல லட்சம் பேர் வேலை செய்யும் தொழில்துறையாக ஐடி நிறுவனம் உள்ளது. இதில் பலப் பிரிவுகள் இருதாலும், அனைவரும் ஏதாவது ஒரு கோடிங் படிப்பை படித்திருப்பார்கள். அவ்வாறு, படித்திருக்கும் படிப்பிற்கு ஏற்றவாறு, வேலையும், அதற்கேற்ற சம்பளமும் வழங்கப்படுகின்றன.
புதிதாக 2019ல் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் படி, ஒரு சில கோடிங் படிப்புகள் கை நிறைய சம்பளமும், குறைவான வேலைப் பளுவையும் கொண்டுள்ளன. ஆனால், சாதாரணமான கோடிங் படிப்புகளுக்கு சுமாரான சம்பளமும், அதிக வேலைப்பளுவும் உடையவையாக உள்ளன.
2019ல் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் படி, ஜாவா உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இப்படிப்பினைப் படித்தவர்களுக்கு நல்ல சம்பளமும், குறைவான வேலைப்பளுவுமே உள்ளன. இதற்கு அடுத்த நிலையில், பைத்தான் உள்ளது. இது படிப்பதற்கு கொஞ்சம் செலவானாலும், இப்படிப்பு மிகவும் வலிமையான ஒன்றாகவே உள்ளது. இதற்கடுத்த நிலையில், ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் கோட்லின் ஆகிய படிப்புகள் உள்ளன.
இவைகளைப் படித்தவர்களுக்கு, இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புகள் தாராளமாக கிடைக்கின்றன. ஆட்டோமேஷன் மற்றும் பிக்டேட்டா போன்றவைகளை பெரும்பாலான, ஐடி நிறுவனங்கள் பின்பற்ற ஆரம்பித்துவிட்ட நிலையில், இந்த தொழில்நுட்பங்களால், பெரும்பாலானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, மேற்கூறிய கோடிங் படிப்புகளைப் படிப்பதன் மூலம், உங்கள் வேலையையும், சம்பளத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என, நிபுணர்கள் நம்புகின்றன.