அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, மதுரையில் உள்ள அரசரடி இரயில்வே மைதானத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் பேசும் பொழுது, இளையராஜாவினைப் பற்றி சற்று விமர்சித்துப் பேசினார் பாரதி ராஜா.
இதனால், வருத்தம் அடைந்த இசைஞானி இளையராஜா இது குறித்து ஒரு மேடையில் வருத்தம் தெரிவித்தார். பின்னர், இருவரும் சிறிது காலம் பேசாமல் இருந்தனர். இதனிடையே தற்பொழுது, இருவரும் தங்களுடைய சொந்த ஊரான தேனியில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அப்பொழுது, இருவரும் சேர்ந்து செல்பி எடுத்து உள்ளனர். இதனை, தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பாரதி ராஜா பதிவிட்டுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பின் இயலும், இசையும் இணைந்தன. என் தேனியில் என பாரதி ராஜா குறிப்பிட்டுள்ளார். இருவருமே, சினிமாவிற்கு வரும் முன்னரே, நல்ல நண்பர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.