இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக, 70 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தோனேஷியாவில் பூகம்பமும், சுனாமியும் ஏற்படுவது சாதரணமான விஷயமாகும். அங்கு ஒவ்வொரு ஆண்டும், பூகம்பமும், அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டின் ஆரம்பமாக தற்பொழுது ஒரு பெரிய பூகம்பமானது ஏற்பட்டு உள்ள்ளது. இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட பயங்கர தீவில் சுமார் 6.2 ரிக்டர் அளவுடைய பயங்கர பூகம்பமானது ஏற்பட்டது.
இதனால், பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகள் மற்றும் கட்டிடங்களை விட்டு, அவசர அவசரமாக சாலைகளுக்கு வந்தனர். இதில், மருத்துவமனைக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டம் ஆனது. இந்த இடிபாடுகளில் சிக்கி 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 650க்கும் அதிகமானோர் மீட்க்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம், அம்மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.