ரஷ்யாவில் அடுத்தடுத்து ஏற்படும் பிரம்மாண்ட பள்ளங்கள் காரணமாக, அந்நாட்டு அரசு குழம்பி போய் உள்ளது.
ரஷ்யாவின் சைபீரியாவில், 100 அடி ஆழமும், 70 அடி அகலமும் உள்ள பிரம்மாண்டமானப் பள்ளம் தோன்றியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தற்பொழுது குழப்பத்தில் உள்ளனர். இந்தப் பள்ளங்கள் எவ்வாறு தோன்றியிருக்கும் என்று, தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அந்நாட்டில் ஏற்கனவே வெனிசுலா பகுதியில் 2013ம் ஆண்டும், இதே போன்று பள்ளங்கள் ஏற்பட்டன.
இந்த பள்ளங்கள் அனைத்தும், வேற்றுக் கிரக வாசிகளின் விண்கலங்கள் தரையிறங்குவதால் ஏற்படக் கூடியவை எனவும், அதனால் தான் இந்தப் பள்ளங்கள் ஆதாரமே இல்லாமல் மிக விரைவாக ஏற்படுகின்றன எனவும், பலர் கருதுகின்றனர். ஆனால், இது நிலத்தடியில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைக் காரணமாகவே, ஏற்பட்டு உள்ளது எனவும் பலர் கருதுகின்றனர். ஆனால், விஞ்ஞானிகள் இதனை ஏற்றுக் கொள்ளவே இல்லை. சைபீரியாவின் தரைக்குக் கீழ், ஏராளமான மீத்தேன் வாயுக்கள் உள்ளன. இந்த வாயுக்கள் சூடாகி வெடிப்பதன் காரணமாக, நிலம் உள்வாங்கிக் கொள்கின்றது.
அதன் காரணமாக, இத்தகையப் பெரியப் பள்ளங்கள் ஏற்படுகின்றன என்று, ஒரு சில விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். ஆனால், இதனை இன்னும் ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த பள்ளங்கள் குறித்து, தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கொண்டு தான் இருக்கின்றன.