இனி பிக்பாஸ் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கமாட்டேன்! நடிகை மதுமிதா பேட்டி!

21 August 2019 சினிமா
madhumitha.jpg

தனியார் இணையதளத்திற்குப் பேட்டி அளித்துள்ள நடிகை மதுமிதா, இனி பிக்பாஸ் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கமாட்டேன் என, வெளிப்படையாகக் கூறியுள்ளார். சுமார் 50 நாட்களைக் கடந்து, பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்ற வாரம் தன்னுடையக் கையை அறுத்துக் கொண்டார் நடிகை மதுமிதா. இதனால், பிக்பாஸ் விதிகளை மீறியதால், அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினர்.

இதனைத் தொடர்ந்து அந்த இணையதளத்திற்குப் பேட்டியளித்த மதுமிதா, நான் ஷெரினை தமிழில் பேசுங்கள் எனக் கூறினேன். அவர்கள் கேட்கவில்லை. என்ன கவின் குள்ளச்சி எனக் கூறினார். அது எனக்கு முற்றிலும் பிடிக்கவில்லை. கவின் யாரையும் மதிக்கமாட்டார். அவர் பெரும்பாலும் பெண்களுடன் மட்டுமே நேரத்தை செலவழிப்பார். அந்த வீட்டில் உள்ள ஒரே நல்ல மனிதர் சேரன் மட்டும் தான்.

ஹலோ ஆப் டாஸ்க்கில் நான் வருண பகவான் கூட கர்நாடகக்காரர் போல. அங்கு மழை பொழிகிறார் என்றேன். அதற்கு கர்நாடகாவைச் சேர்ந்த ஷெரின் கடும் எதிர்ப்பினை தெரிவித்தார். எப்பொழுது பார்த்தாலும், தமிழ் நாடு என்கிறாயே, உன்னால், தமிழ் நாட்டிற்காக, உயிரைத் தர முடியுமா எனக் கேள்விக் கேட்டனர். அதனால் தான், நான் என் கையை அறுத்துக் கொண்டேன் என மதுமிதா கூறியுள்ளார். மேலும், இனி நான் பிக்பாஸ் வீட்டின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

HOT NEWS