பிக்பாஸ் ஒன்று நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தவர் ஜூலி. இவர் அடுத்துப் படங்களிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில், நீங்கள் நர்ஸ் ஆயிற்றே எப்பொழுது சேவைக்கு திரும்புவீர்கள் எனப் பலரும் கேட்டனர். அது குறித்து, பதில் சொன்ன ஜூலி விரைவில் கண்டிப்பாக களமிறங்குவேன் எனத் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, தற்பொழுது அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள பயிற்சி மையத்தில், கொரோனா வைரஸ் நோயாளிகளை பார்த்துக் கொள்வதற்கான படிப்பினை, நடிகை ஜூலி முடித்துள்ளார். தற்பொழுது தான், அனுமதிக்காக விண்ணப்பித்து இருப்பதாகவும், விரைவில் வாய்ப்பு வந்ததும் சேவை செய்ய வருவேன் எனவும், நடிகை ஜூலி பதிவிட்டுள்ளார்.