இதுவரை நடந்த இரண்டு பிக்பாஸிலும், கமல் தான், அனைவருக்கும் குறும்படம் காண்பித்து வந்தார். இந்தப் பிக்பாஸ்3 நிகழ்ச்சியில், கமல்ஹாசனுக்கே குறும்படம் காண்பித்துவிட்டனர்.
நேற்று நடைபெற்ற பிக்பாஸ்3 எவிக்ஷன் நிகழ்ச்சியில், கமல்ஹாசன் வந்து பேசினார். அப்பொழுது, கமல்ஹாசனுக்கு ஒரு குறும் படம் போடப்பட்டது. அதில் அவருடைய அண்ணன் பேசினார். அதில், கமல்ஹாசனின் சினிமாப் பார்வையைப் பற்றியும், அவர் திரையறங்கில் மதுரைவீரன் படத்தைப் பார்த்துக் கொண்டே இருந்ததைப் பற்றியும் கூறி நெகிழ்ந்தார்.
பின்னர், இது குறித்துப் பேசிய கமல், அவர் என்னை விட 24 வயது மூத்தவர். அவர் எனக்கு அண்ணன் மட்டுமல்ல, அண்ணன், ஆசிரியர் மற்றும் தந்தையும் ஆவார். எனக்கும், உணர்ச்சிகள் உண்டு. ஆனால், அதனை வெளியில் உணர்ச்சிவசப்பட்டு காட்ட விரும்பவில்லை என்று பேசினார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் இருந்து, நடிகை வனிதா வெளியேற்றப்பட்டார். பின்னர், அப்பொழுது வந்த வனிதாவுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும், அன்னாத்த ஆடுறார் ஒத்திக்கோ பாடலுக்கு நடனமாடினார்.
நடன இயக்குநர் திரு. சாண்டியின் மாமியார் மற்றும் அவருடைய மனைவியின் சகோதரி ஆகியோர், சாண்டியுடன் உரையாடினர்.