தமிழில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது, கோலாகலமாகத் துவங்கி உள்ளது.
நேற்று (04-10-2020) விஜய் டிவியில், உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, கோலாகலமாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தொடங்கியது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இதில் பங்கேற்று உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், எட்டு ஆண்களும், எட்டு பெண்களும் பங்கேற்று உள்ளனர். இதில், ரியோ, சனம் ஷெட்டி, நடிகை ரேகா, பாலா, அனிதா சம்பத், சிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், சாம், நடிகர் ஆரி, கேப்ரில்லா, விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, மற்றும் பாடகர் ஆஜித் ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.