நடிகர் விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் பிகில். இப்படம், வசூலில் மாபெரும் சாதனையை செய்தது. மொத்தமாக, 300 கோடி ரூபாய் வரை வசூலித்து அசத்தியது.
இந்தப் படத்தில், பல துணை நடிகைகள் நடித்தனர். அவர்களில் காயத்ரிரெட்டி என்பவர் கால்பந்து வீராங்கணையாக நடித்தார். அவருடையப் புகைப்படமானது, தற்பொழுது வைரலாகி வருகின்றது.
தன்னுடைய 18 வயதில் மாடலிங் துறைக்குள் வந்தவர் காயத்ரி ரெட்டி. இவர் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான அழகிப் போட்டியில், பத்து இடங்களுக்குள் வந்து அசத்தி இருந்தார்.
அவருடையப் புகைப்படங்களுக்கு, இன்ஸ்டாகிராமில் பலர் லைக்குகளை வாரி வழங்குவர். அதற்காக, பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படமானது, இணையம் முழுக்கவும் வைரலாகி உள்ளது.