பிகில் பாடல் வெளியீட்டு விழாவை எதன் அடிப்படையில் அனுமதித்தீர்கள்! உயர்கல்வித் துறைக் கேள்வி?

24 September 2019 அரசியல்
bigilaudiolaunch.jpg

நடிகர் விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள நிறுவனம் பிகில். இத்திரைப்படம் வரும் தீபாவளி அன்று, திரைக்கு வர உள்ளது. இதனை முன்னிட்டு இப்படத்தின், பாடல்கள் சென்ற வாரம் வெளியாகின.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவினை, சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமாக கொண்டாடினர். அப்பொழுது, பல விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதனை பல விஜய் ரசிகர்களும் எதிர்த்தனர். அந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், அரசினைக் குறை கூறுவதாகவும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்தக் கல்லூரி மீது தமிழக உயர்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. எதன் அடிப்படையில், இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு கல்வி நிலையத்தில், அனுமதி அளித்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளது.

HOT NEWS