நடிகர் விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் வெளியாகி உள்ள திரைப்படம் பிகில். இத்திரைப்படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் அவர்களின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது.
இத்திரைப்படம், கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது. அன்று முதல் தற்பொழுது வரை, ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பைப் பெற்று வருகின்றது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் வசூலைக் குவிப்பதில் சாதனைப் படைத்து வருகின்றது.
படத்தின் ஆறாவது நாளான நேற்று, பிகில் திரைப்படம் சுமார் 200 கோடியை வசூல் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து, சினிமா விமர்சகர்கள் தொடர்ந்து, பாக்ஸ் ஆபிஸ் பற்றியத் தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த பிகில் திரைப்படம், பெண்கள் கால்பந்து விளையாட்டினை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளதால், பெண்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.