மற்ற நடிகர்களின் ரசிகர்களோ, படம் வெளியாகி ஹிட்டாகுமா அல்லது ப்ளாப் ஆகுமா என்ற கவலைப் பட்டால், விஜய் படம் வெளியாகும் முன், அந்தப் படம் குறித்த நாளில் வெளியாகுமா, வெளியாகாதா என்பதே ரசிகர்களின் கவலையாக இருக்கின்றது.
அந்த அளவிற்கு, அவருடையப் படங்கள் பிரச்சனைகளைச் சந்திக்கின்றன. அந்த வரிசையில், பிகில் திரைப்படமும் சொதப்பாமல், சிக்கலில் மாட்டியுள்ளது. பிகில் திரைப்படத்தின் கதை என்னுடையது என கேபி செல்வா எனும் உதவி இயக்குநர் உயர்நீதிமன்றத்தில், வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவருடைய வழக்கினை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கினை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர அனுமதி வழங்கியுள்ளது. இதனால், பிகில் திரைப்படம் உரிமையியல் நீதிமன்றத்திற்குச் செல்ல உள்ளது. இந்நிலையில், இது விளம்பரத்திற்காகவும், பணம் பறிப்பதற்காகவும் செய்யப்படும் செயல் என, இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளார்.