கடந்த வெள்ளிக்கிழமை, நடிகர் விஜய் நடித்து வெளியான திரைப்படம் பிகில். இத்திரைப்படம் பல கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், திரையறங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கின்றது.
இப்படம் முதல் நாள் மட்டும், 50 முதல் 60 கோடி வரை வசூல் செய்து இருக்கலாம் என சினமா வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், தொடர்ந்து சனி, ஞாயிறு மற்றும் திங்கட் கிழமை என மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்துவிட்டதால், இப்படத்திற்கு கூட்டம் கூட்டமாக சென்று பார்க்கின்றனர்.
இதனால், இத்திரைப்படம் 100 கோடி ரூபாயினை வசூல் செய்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்னும், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இது குறித்த, அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிடவில்லை.