பிகில் திரைப்படம் தற்பொழுது சென்சார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த, அதன் சென்சார் சர்டிபிகேட் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், கல்பாத்தி எஸ் அகோரம் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பிகில். இப்படத்தின் பாடல்கள், கடந்த மாதம் வெளியாகி இணையத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில், கடந்த வாரம் பிகில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
வெளியாகி இரண்டு நாட்களுக்குள்ளேயே, சுமார் 2 கோடி பேர் இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துள்ளனர். மேலும், 20 லட்சம் லைக்ஸ்களையும் பெற்று, பிகில் ட்ரெய்லர் சாதனைப் படைத்தது.
இதனிடையே, இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில், சென்சார் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. தற்பொழுது, பிகில் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகி உள்ளது.
திரைப்படத் தணிக்கைத் துறையின் உறுப்பினர், லீலா மீனாட்சி முன்னிலையில், இந்த பிகில் திரைப்படம் திரையிடப்பட்டது. இதனை, பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கி உள்ளனர். இப்படம் சுமார், 2 மணி நேரம் 59 நிமிடம் ஓடக் கூடியதாக உள்ளது. மேலும், இப்படத்திற்கு, யூ/ஏ சான்றிதழும் வழங்கப்பட்டு உள்ளது.
இதனை தற்பொழுது, விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.