பிகிலை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

25 October 2019 சினிமா
bigil.jpg

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில், நடிகர் விஜய், நயன்தாரா, யோகிபாபு உட்பட பலர் நடித்திருக்கும் பிகில் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இத்திரைப்படம், விஜயும் அட்லியும் இணையும் மூன்றாவது திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கின்றனார்.

இப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்ட பின்பு, நேற்று இரவு முதலே திரையறங்கின் முன்பு ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். தமிழகத்தின் பல திரையறங்குகளில், சிறிது தாமதமாகவேப் படம் வெளியானது. இதனை, பட்டாசு வெடித்துக் கொண்டாடி, பிளக்ஸ் மற்றும் கட்அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் வைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

நடிகை வரலட்சுமி சரத்குமார், சென்னையில் உள்ள வெற்றித் திரையறங்கிற்கு முதல் ஆளாக சென்றுள்ளார். இவரைப் போன்று, பல சினிமா நட்சத்திரங்களும் முதல் நாள் முதல் காட்சிக்கு திரைக்கு சென்றுள்ளனர்.

கிருஷ்ணகிரியில் உள்ள திரையறங்கில், திரைப்படம் வெளியாகத் தாமதமானது. அதனால், அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த வாகனத் தடுப்புகளைத் தள்ளிவிட்ட விஜயின் ரசிகர்கள், ரகளையில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் சிறிய தடியடி நடத்தினர். பின்னர், இது தொடர்பாக 20 பேரினை போலீசார் கைது செய்தனர்.

BIGIL REVIEW

HOT NEWS