வரும் வெள்ளிக்கிழமை அன்று, நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தினை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெயின்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்பொழுது, படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் விளம்பரதிற்காக, டிவிட்டரில் ஈமோஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை தற்பொழுது, விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில், இந்திய அளவில் டிரெண்ட் செய்து அசத்தி வருகின்றனர். பல விஜய் ரசிகர்கள், பால்குடம் எடுத்தல், மண்சோறு சாப்பிடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.