நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, பிகில் படம் வெளியாகும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம், தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக் கிழமையான அக்டோபர் 25ம் தேதி வெளியாக உள்ளதாக, அப்படத்தினை தயாரிக்கும் நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதே போல, நடிகர் கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படமும் அக்டோபர் 25ம் தேதி வெளியாக உள்ளதாக, கார்த்தி அறிவித்துள்ளார். இதனால், கார்த்தி மற்றும் விஜயின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.