பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி! முதல்வர் உத்தரவு!

24 October 2019 சினிமா
bigilaudiolaunch.jpg

நடிகவர் விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இயக்கத்தில், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பிகில்.

இத்திரைப்படம், நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிக்கெட்ட்டுகள் ஆன்லைனில், விற்றுத் தீர்ந்துள்ளன. நாளைக் காட்சிக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளது. இந்நிலையில், விஜயின் மக்கள் இயக்கம் சார்பில், சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இன்று மாலை வரை அதற்கான அனுமதியானது கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி, தமிழ்நாடு செய்தித் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். பின்னர், தமிழக அரசு தற்பொழது நாளை ஒரு நாள் மட்டும், சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கு, இப்படத்தினைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில், நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

HOT NEWS