நடிகர் விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பிகில். இத்திரைப்படம் வரும் வெள்ளிக் கிழமை அன்று வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுகள், ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டு விட்டன.
இந்நிலையில், பிகில் மற்றும் கைதி ஆகிய படங்களுக்கு, சிறப்புக் காட்சிக்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது குறித்துப் பேசுகையில், பிகில் உள்ளிட்ட எந்தத் திரைப்படத்திற்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், விதிகளை மீறி படத்தினை ஒளிபரப்பும் திரையறங்கின் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எச்சரித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் பேசுகையில், பிகில் படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு, அதிக கட்டணம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். தீபாவளிக்கு வரும் திரைப்படங்களுக்கு, திரையரங்குகளுக்கு எவ்வித சிறப்பு காட்சிக்கான அனுமதியும் அரசு வழங்கவில்லை. அதை மீறி சிறப்புக் காட்சிகள் திரையிடும் திரையறங்கு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.