பீகார் சட்டசபை தேர்தல்! தேர்தல் அறிக்கையினை வெளியிட்டது பாஜக!

22 October 2020 அரசியல்
biharelection20201.jpg

பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினை, பாஜக கட்சியானது வெளியிட்டு உள்ளது.

பீகார் மாநிலத்தில் தற்பொழுது தேர்தல் திருவிழா கலைக் கட்டி உள்ளது. இதில் பாஜகவும், நிதிஷ்குமார் தலைமையிலான ஜனதா தள உள்ளிட்டக் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. அதே போல், காங்கிரஸ் கட்சியானது, லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி உள்ளிட்டப் பலக் கட்சிகளுடன் இணைந்து, இந்தத் தேர்தலை சந்திக்கின்றது. மூன்று கட்டங்களாக நடைபெறுகின்ற இந்தத் தேர்தலுக்குரிய தேர்தல் அறிக்கையினை, தற்பொழுது பாஜக வெளியிட்டு உள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பீகாரில் நிதிஷ்குமாரின் கட்சியினருடன் இணைந்து தங்களுடைய தேர்தல் அறிக்கையினை வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கைக்கு, ஐந்து சூத்திரங்கள், ஒரு லட்சியம், 11 சபதங்கள் எனப் பெயர் வைத்து உள்ளனர். இதில் பல சிறப்பம்சங்களானத் திட்டங்கள் உள்ளதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், 3 லட்சம் ஆசிரியர் பணிகள் பீகாரில் உருவாக்கப்படும் எனவும், ஒன்பதாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மெரிட் மதிப்பெண் எடுக்கின்ற மாணவர்களுக்கு, டேப் வழங்கப்படும் எனவும், பாட்னா மற்றும் ராஜ்கிர் நகரங்களில் மேம்படுத்தப்பட்ட ஐடி பூங்காக்கள் உருவாக்கப்படும் எனவும் கூறினார். புதியதாக விளையாட்டுப் பல்கலைக் கழகம் ஒன்று உருவாக்கப்படும் எனவும், பீகாரானது அடுத்தக்கட்ட ஐடி இணைப்பாக மாற்றப்படும் எனவும் உறுதியளித்தார். பீகாரில் பாஜக ஆட்சி அமைந்ததும், அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியானது இலவசமாக வழங்கப்படும்.

அடுத்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறினார். மற்ற மாநிலங்களில் இறந்த புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு, 5 லட்சம் வழங்கப்படும் எனவும், தேசத்திற்காக உயிர்நீத்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலையுடன் 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். வருகின்ற அக்டோபர் 28ம் தேதி அன்று, தொடங்கும் தேர்தலானது, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7ம் தேதி என மூன்று நாட்களில் நடைபெறுகின்றது. நவம்பர் 10ம் தேதி அன்று, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

HOT NEWS