புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு காண்டம்! பீகார் அரசு முடிவு!

03 June 2020 அரசியல்
migrantworkers124.jpg

பீகார் மாநிலத்திற்கு வருகின்ற புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு, காண்டம் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பீகார் மாநிலத்திற்கு நாடு முழுவதும் இருந்து, சுமார் 28 லட்சம் முதல் 29 லட்சம் புலம் பெயரும் தொழிலாளர்கள் வந்து குவிந்தனர். அவர்கள் தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்குத் திரும்ப ஆரம்பித்தனர். அவர்களை 14 நாட்கள், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, 8.77 லட்சம் பேர் தனிமைப்படுத்தும் காலம் முடிந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்பினர். 5.3 லட்சம் பேர் தற்பொழுது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மொத்தமாக, இவர்களுக்கு தேவையற்ற கர்ப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, காண்டம் உள்ளிட்டப் பொருட்களை வழங்கி வருவதாக, அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற உடலுறவால் தேவையற்ற கர்ப்பம் ஏற்படலாம் எனவும், நோய் தொற்றுப் பரவும் அபாயம் உண்டாகலாம் எனவும், எனவே அவர்களை பாதுகாக்கும் பொருட்டு தற்பொழுது இந்த முயற்சியில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது.

HOT NEWS