பீகாரில் தாண்டவமாடும் மழை! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

30 September 2019 அரசியல்
biharrains.jpg

பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாட்னா உட்பட பல நகரங்கள், இந்த மழையின் காரணமாக நீரில் மிதக்கின்றன.

கடந்த வெள்ளிக் கிழமை முதல் பெய்து வரும் கனமழையால், சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முதலியவை, மிகவும் மோசமாகப் பாதிக்கப்பபட்டுள்ளன. குறிப்பாக, கோபால்காஜ், புரேனா, கத்திஹார், புக்ஷார் உட்பட மொத்தம் 19 மாவட்டங்கள் இந்த மழையினால், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநில அரசு தற்பொழுது, முகாம்களில் பலரையும் தங்க வைத்து வருகின்றது. பேரிடர் மீட்புக் குழு மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. தற்பொழுது வரை, 20 பேர் இந்த மழையின் காரணமாக, இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS