பீகாரில் வரலாறு காணாத மழை! கண்ணீரில் பொது மக்கள்!

29 September 2019 அரசியல்
biharrains.jpg

ஆனாலும், இந்த ஆண்டு வட இந்தியா அதிகமாகப் பாதிக்கப்பட்டது மழையால் தான்! எப்பொழுதும் தென் இந்தியா மட்டுமே, மழையால் அதிகமாகப் பாதிக்கப்படும். இப்பொழுது வழக்கத்திற்கு மாறாக, வட இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதமாக மஹாராஷ்ட்ரா, பீகார், ஒடிசா மற்றும் குஜராத் ஆகியவை மழையில் இருந்து, தப்பித்து வந்த நிலையில், நேற்று பீகார் வசமாக மாட்டிக் கொண்டது எனக் கூறினால், அது மிகையாகாது.

கடந்த 40 மணி நேரங்களுக்கும் மேலாக, அங்கு மழை பெய்து வருகின்றது. தற்பொழுது வரை 40 மணி நேரத்தில் மட்டும், 140 மிமி மழை பெய்துள்ளதாக, வானிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீகார் மாநிலத்தின் பாட்னா, ஹாயா, பாஹல்பூர் போன்ற நகரங்கள், மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது கிடைத்துள்ளத் தகவலின் படி, பாட்னாவில் 140மிமீ மழையும், ஹாயாவில் 88மிமீயும், பாஹல்பூரில் 87மிமீ மழையும் பெய்துள்ளன.

தேசிய பேரீடர் மீட்புப் படையினரும், தற்பொழுது உஷார் நிலையில் உள்ளன. பீகாரின் பல இடங்களில், மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும், ஷோ ரூம்களுக்குள் நீர் சென்றுள்ளதால், கடைக்காரர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். மழை நீரில் தத்தளித்து வரும் பொதுமக்களை, போலீசார் காப்பாற்றி, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இதனைப் பற்றி, எந்த ஒரு செய்தி ஊடகமும் செய்திகளை வெளியிடவில்லை என, பீகார் மாநில மக்கள், சமூக வலைதளங்களில், தங்களுடைய மன ஆதங்கத்தைக் கொட்டி வருகின்றனர். கடும் மழையின் காரணமாக, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், பொது மக்கள் களக்கம் அடைந்துள்ளனர்.

HOT NEWS