10 லட்சம் வேலை வாய்ப்பு, ஆசிரியர் சேர்க்கை, பிரசவத்திற்கு உதவி தொகை! ஆர்ஜேடி தேர்தல் அறிக்கை!

24 October 2020 அரசியல்
rjdmanifesto.jpg

பீகாரில் நடைபெற உள்ள தேர்தலுக்கான, தங்களுடையத் தேர்தல் அறிக்கையினை, ராஷ்ட்ரிய ஜனதா தளம் இன்று வெளியிட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாஜக கூட்டணியானது தன்னுடையத் தேர்தல் அறிக்கையினை பீகாரில் வெளியிட்டது. அதற்குப் போட்டியாக, இன்று காங்கிரஸூடன் கூட்டணி வைத்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியானது, தங்களுடைய தேர்தல் அறிக்கையினை வெளியிட்டு உள்ளது. அதனை அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டு உள்ளார்.

அதில், பத்து லட்சம் அரசு வேலைகளை உடனடியாக, போர்க்கால அடிப்படையில் வழங்குவோம் எனத் தெரிவித்து உள்ளார். அத்துடன், ஆசிரிரயர் பணிக்கு அதிவிரைவாக ஆட்களைத் தேர்வு செய்வோம் என்றும் கூறியுள்ளார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு 4,000 ரூபாயினை உதவித் தொகையாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். அரசு வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது எனவும், குறைந்த பட்ச விலை உத்திரவாதமானது, விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

மேலும், ஸ்மார்ட் சிட்டி போல, ஸ்மார்ட் கிராமங்கள் உருவாக்கப்படும் எனவும், புதிய தொழிற் கொள்கையும் உருவாக்கப்படும் எனவும் கூறியுள்ளார் தேஜஸ்வி.

HOT NEWS