இறந்த குழந்தையை தூக்கிச் சென்ற தாய்! கண்ணீர் விட வைக்கும் காட்சிகள்!

15 April 2020 அரசியல்
coronachildbihar.jpg

பீகாரில், ஊரடங்கு உத்தரவின் பொழுது, இறந்த குழந்தையை தூக்கிச் சென்ற தாயின் வீடியோவானது, பார்ப்பவர்களைக் கண்கலங்க வைக்கின்றது.

இந்தியா முழுவதும், கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், ஊரடங்கின் காரணமாக வட மாநிலங்களில் வேலை செய்தவர்கள், தங்களுடைய சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலையும் நிலை உருவானது. பல ஆயிரம் பேர், சாலையில் நடைபயணமாக சொந்த ஊருக்குச் சென்றனர்.

இதை விடக் கொடுமையான சம்பவம் ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது. பீகார் மாநிலம் அரவல் மாவட்டம், சகோபூர் கிராம்பத்தினைச் சேர்ந்தவர் கிரிஜேஷ். அவருடைய குழந்தைக்கு, சளி மற்றும் இருமல் இருந்ததால், அக்குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அந்தக் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஜஹனாபாத் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது, பாட்னா மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதனால், தன்னுடையக் குழந்தையை பாட்னா மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார். ஆனால், அதற்குள் பரிதாபமாக அந்தக் குழந்தை இறந்துவிட்டது.

இந்த குழந்தையை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இதனால், இறந்த குழந்தையின் உடலை எடுத்துக் கொண்டு, அந்தக் குழந்தையின் தாய், ரோட்டில் நடந்தே சென்றுள்ளார். அவர் பின்னால், அவருடைய கணவர் தன்னுடைய மற்றொரு குழந்தையுடன் நடந்து சென்றார். அவர்களுடைய நிலையைப் பார்த்த ஒருவர், தன்னுடையக் காரினை வழங்கி உதவி செய்துள்ளார்.

இந்த வீடியோவினைப் பார்ப்பவர்கள், பீகாரின் மருத்துவ நிலைக் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து, 25 கிலோமீட்டருக்கு அந்தக் குழந்தையின் உடலினை, அந்தத் தாய் தூக்கிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS